अद्वैतभारती
सूत्रम् ११ஸூத்ரம் 11 / ५३53
अबधिकरणम्அப3தி4கரணம்

आपः ॥ ११ ॥ஆப꞉ ॥ 11 ॥

ब्रह्मणोऽपां जन्म किंवा वह्नेर्नाग्नेर्जलोद्भवः ॥
विरुद्धत्वान्नीरजन्म ब्रह्मणः सर्वकारणात् ॥ ९ ॥
अग्नेराप इति श्रुत्या ब्रह्मणो वह्न्युपाधिकात् ॥
अपां जनिर्विरोधस्तु सूक्ष्मयोर्नाग्निनीरयोः ॥ १० ॥
ப்3ரஹ்மணோ(அ)பாம் ஜந்ம கிம்வா வஹ்நேர்நாக்3நேர்ஜலோத்3ப4வ꞉ ॥
விருத்3த4த்வாந்நீரஜந்ம ப்3ரஹ்மண꞉ ஸர்வகாரணாத் ॥ 9 ॥
அக்3நேராப இதி ஶ்ருத்யா ப்3ரஹ்மணோ வஹ்ந்யுபாதி4காத் ॥
அபாம் ஜநிர்விரோத4ஸ்து ஸூக்ஷ்மயோர்நாக்3நிநீரயோ꞉ ॥ 10 ॥

தமிழ்பிரஹ்மத்திலிருந்து ஜலத்தின் உத்பத்தியா? அல்லது, அக்னியிலிருந்தா? (ஜலமும் அக்னியும் ஒன்றுக்கொன்று) விரோதமாயிருப்பதால், அக்னியில் இருந்து ஜலம் உண்டா காது. எல்லாவற்றிற்கும் காரணமான பிரஹ்மத்தில் இருந்து தான் ஜலத்தின் உத்பத்தி.

அக்னியிலிருந்து ஜலம்" என்ற சுருதியினால், அக்னியை உபாதியாயுடைய பிரஹ்மத்திலிருந்து தான் ஜலத்தின் உத்பத்தி. விரோதம் என்பதோ ஸுக்ஷ்மதசை யிலிருக்கும் அக்னிக்கும் ஜலத்திற்கும் கிடையாது.
संस्कृतम्
தமிழ்
‘अतस्तथा ह्याह’ इत्यनुवर्तते । आपः, अतः तेजसः, जायन्ते । कस्मात् ? तथा ह्याह — ‘तदपोऽसृजत’ इति, ‘अग्नेरापः’ इति च । सति वचने नास्ति संशयः । तेजसस्तु सृष्टिं व्याख्याय पृथिव्या व्याख्यास्यन् , अपोऽन्तरयामिति ‘आपः’ इति सूत्रयांबभूव ॥ ११ ॥‘அதஸ்ததா2 ஹ்யாஹ’ இத்யநுவர்ததே । ஆப꞉, அத꞉ தேஜஸ꞉, ஜாயந்தே । கஸ்மாத் ? ததா2 ஹ்யாஹ — ‘தத3போ(அ)ஸ்ருஜத’ இதி, ‘அக்3நேராப꞉’ இதி ச । ஸதி வசநே நாஸ்தி ஸம்ஶய꞉ । தேஜஸஸ்து ஸ்ருஷ்டிம் வ்யாக்2யாய ப்ருதி2வ்யா வ்யாக்2யாஸ்யந் , அபோ(அ)ந்தரயாமிதி ‘ஆப꞉’ இதி ஸூத்ரயாம்ப3பூ4வ ॥ 11 ॥
(ஜலம் பிரஹ்மத்திலிருந்து உண்டானதா அல்லது தேஜஸ்ஸிலிருந்து உண்டானதா என்று ஸந்தேஹம். முண்டக ச்ருதியில் இந்த பிரஹ்மத்திலிருந்து ஐந்து பூதங்களும் உண்டானதாக சொல்லியிருப்பதால் பிரஹ்மம்தான் ஜலத்துக்குக் காரணம் தேஜஸ் அல்ல. அக்னி ஜலத்தை அழித்து விடுவதால் ஒன்றுக்கொன்று விரோதமிருப்பதால் ஜலத்திற்கு தேஜஸ் காரணமல்ல. தேஜஸ்ஸிற்கு பிறகு பிரஹ்மம் ஜலத்தை ஸிருஷ்டித்தது என்று க்ரமத்தைத்தான் தைத்திரீய சுருதி கூறுகிறது என்று பூர்வபக்ஷம்.

முன் அதிகரணத்தில் சொன்ன யுக்திகளாலேயே ஜலம் தேஜஸ்ஸிலிருந்து தான் உண்டானது என்று ஸித்தாந்தம். அக்னியிலிருந்து ஜலம் என்ற தைத்திரீய சுருதியில் ஐந்தாவது வேற்றுமையால் ஜலத்திற்கு அக்னி நேரான காரணமென்று தெரிகிறது. இதையனுசரித்து மற்ற சுருதிகளுக்கு தேஜோரூபமாக ஆன பிரஹ்மம் ஜலத்தை ஸிருஷ்டித்தது என்று அர்த்தம் கூறினால் விரோதமில்லை. பரம்பரையாக உபாதிகள் மூலமாக பிரஹ்மமும் காரணம். பஞ்சீகரணம் ஏற்படுவதற்குமுன் தேஜஸ்ஸிற்கும் ஜலத்திற்கும் விரோதமில்லை என்பது ஸித்தாந்தியின் கருத்து).

“இதிலிருந்து, அப்படியல்லவா சொல்கிறது” என்பது தொடர்ந்து வருகிறது. ஜலம் "இதிலிருந்து”, தேஜஸிலிருந்து, உண்டாகிறது. ஏன்? 'அது ஜலத்தை ஸ்ருஷ்டித்தது” என்றும் “அக்னியிலிருந்து ஜலம்” என்றும் அப்படியல்லவா சொல்கிறது வசனம் இருக்கும்போது ஸம்சயம் கிடையாது. ஆனாலும் தேஜஸின் ஸ்ருஷ்டியை சொல்லிவிட்டு பிருதிவியின் ஸ்ருஷ்டியைச் சொல்லப் போகிறவர், மத்தியில் ஜலம் வருகிறது என்பதினால், “ஜலம்” என்று ஸூத்திரம் செய்தார்.