अद्वैतभारती
सूत्रम् १२ஸூத்ரம் 12 / २७27
अनिष्टादिकार्यधिकरणम्அநிஷ்டாதி3கார்யதி4கரணம்

अनिष्टादिकारिणामपि च श्रुतम् ॥ १२ ॥அநிஷ்டாதி3காரிணாமபி ச ஶ்ருதம் ॥ 12 ॥

चन्द्रं याति न वा पापी ते सर्व इति वाक्यतः ॥
पञ्चमाहुतिलाभार्थं भोगाभावेऽपि यात्यसौ ॥ ५ ॥
भोगार्थमेव गमनमाहुतिर्व्यभिचारिणी ॥
सर्वश्रुतिः सुकृतिनां, याम्ये पापिगतिः श्रुता ॥ ६ ॥
--वैयासिकन्यायमाला
சந்த்3ரம் யாதி ந வா பாபீ தே ஸர்வ இதி வாக்யத꞉ ॥
பஞ்சமாஹுதிலாபா4ர்த2ம் போ4கா3பா4வே(அ)பி யாத்யஸௌ ॥ 5 ॥
போ4கா3ர்த2மேவ க3மநமாஹுதிர்வ்யபி4சாரிணீ ॥
ஸர்வஶ்ருதி꞉ ஸுக்ருதிநாம், யாம்யே பாபிக3தி꞉ ஶ்ருதா ॥ 6 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பாபம் செய்தவன் சந்திரனை அடைகிறானா, இல்லையா? "அவர்கள் எல்லாரும்" என்று வாக்கியமிருப்பதாலும், ஐந்தா வது ஆஹுதி கிடைப்பதற்காகவும், போகமில்லையானாலும் இவன் போகிறான்.

போவது என்பது போகத்திற்காகத்தான். ஆஹுதி பிசகக் கூடியது. "எல்லாரும்" என்று சொன்னது புண்யம் செய்தவர்களுக்காக. பாபம் செய்தவர்களுக்குப் போக்கு யம லோகத்தில் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
इष्टादिकारिणश्चन्द्रमसं गच्छन्तीत्युक्तम् । ये त्वितरेऽनिष्टादिकारिणः, तेऽपि किं चन्द्रमसं गच्छन्ति, उत न गच्छन्तीति चिन्त्यते । तत्र तावदाहुः — इष्टादिकारिण एव चन्द्रमसं गच्छन्तीत्येतत् न । कस्मात् ? यतोऽनिष्टादिकारिणामपि चन्द्रमण्डलं गन्तव्यत्वेन श्रुतम् । तथा हि अविशेषेण कौषीतकिनः समामनन्ति —‘ये वै के चास्माल्लोकात्प्रयन्ति चन्द्रमसमेव ते सर्वे गच्छन्ति’ (कौ. उ. १ । २)इति । देहारम्भोऽपि च पुनर्जायमानानां न अन्तरेण चन्द्रप्राप्तिम् अवकल्पते, ‘पञ्चम्यामाहुतौ’ इत्याहुतिसंख्यानियमात् । तस्मात्सर्व एव चन्द्रमसमासीदेयुः । इष्टादिकारिणामितरेषां च समानगतित्वं न युक्तमिति चेत् , न, इतरेषां चन्द्रमण्डले भोगाभावात् ॥ १२ ॥இஷ்டாதி3காரிணஶ்சந்த்3ரமஸம் க3ச்ச2ந்தீத்யுக்தம் । யே த்விதரே(அ)நிஷ்டாதி3காரிண꞉, தே(அ)பி கிம் சந்த்3ரமஸம் க3ச்ச2ந்தி, உத ந க3ச்ச2ந்தீதி சிந்த்யதே । தத்ர தாவதா3ஹு꞉ — இஷ்டாதி3காரிண ஏவ சந்த்3ரமஸம் க3ச்ச2ந்தீத்யேதத் ந । கஸ்மாத் ? யதோ(அ)நிஷ்டாதி3காரிணாமபி சந்த்3ரமண்ட3லம் க3ந்தவ்யத்வேந ஶ்ருதம் । ததா2 ஹி அவிஶேஷேண கௌஷீதகிந꞉ ஸமாமநந்தி —‘யே வை கே சாஸ்மால்லோகாத்ப்ரயந்தி சந்த்3ரமஸமேவ தே ஸர்வே க3ச்ச2ந்தி’ (கௌ. உ. 1 । 2)இதி । தே3ஹாரம்போ4(அ)பி ச புநர்ஜாயமாநாநாம் ந அந்தரேண சந்த்3ரப்ராப்திம் அவகல்பதே, ‘பஞ்சம்யாமாஹுதௌ’ இத்யாஹுதிஸம்க்2யாநியமாத் । தஸ்மாத்ஸர்வ ஏவ சந்த்3ரமஸமாஸீதே3யு꞉ । இஷ்டாதி3காரிணாமிதரேஷாம் ச ஸமாநக3தித்வம் ந யுக்தமிதி சேத் , ந, இதரேஷாம் சந்த்3ரமண்ட3லே போ4கா3பா4வாத் ॥ 12 ॥
(புண்யம் செய்தவர்கள் சந்திரனையடைவதைப் போல பாபம் செய்தவர்கள் சந்திரனையடைகிறார்களா இல்லையா என்று ஸந்தேஹம்.

இந்த லோகத்திலிருந்து போகிறவர்களெல்லாரும் சந்திரனையேயடைகிறார்கள் என்று பொதுவாகச் சொல்லியிருப்பதால் பாபிகளும் ஸ்வர்க்கம் போகிறார்கள் பாபிகளுக்கு சந்திர லோகத்தில் ஸுகானுபவமில்லா விட்டாலும் 5வது ஆஹுதியில் சரீரம் ஏற்படுவதற்காக பாபிகளும் ஸ்வர்கம் போவதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பூர்வபக்ஷம்.

ஸ்வர்க்கத்தில் ஸுகத்தை அனுபவிப்பதற்கா கத்தான் புண்யசாலிகள் அங்கு போகிறார்கள். அங்கு ஸுகானுபவமில்லாவிட்டால் பாபிகள் எதற்காகப் போக வேண்டும். வேறு பிரயோஜனம் இல்லாமல் கீழே இறங்குவதற்காக ஒருவனும் உயரே ஏறமாட்டான். பாபிகள் யமலோகம் போய் நரகங்களில் துக்கத்தை அனுபவித்து விட்டுத் திரும்புவதாக புராணம் கூறுகிறது. 5-வது ஆஹுதியில் சரீரம் பெறுவது எல்லோருக்குமில்லை. த்ரோணர், ஸீதை திருஷ்டத்யும்னன், த்ரௌபதி முதலானவர்களுக்கு 5 ஆஹுதிகளில்லாமலே சரீரம் ஏற்படுகிறது. எல்லோரும் என்பது புண்யம் செய்தவர் களைத்தான் குறிக்கும் பாபிகளைக் குறிக்காது. ஆகையால் பாபிகள் ஸ்வர்கம் போவதில்லை என்று ஸித்தாந்தம்).

யாகம் முதலியதை செய்தவர்கள் சந்திரனை அடைகிறார்கள் என்று சொல்லப்பட்டது. வேறு எவர்கள் யாகம் முதலியது செய்யாதவர்களாய் பாபம் செய்கிறார் களோ, அவர்களும்கூட சந்திரனை அடைகிறார்களா? அல்லது அடைகிறதில்லையா? என்று சிந்திக்கப்படுகிறது.

பூர்வபக்ஷம் : அவ்விஷயத்தில், யாகம் முதலியதை செய்தவர்கள்தான் சந்திரனை அடைகிறார்கள் என்ற இது இல்லை என்று சொல்கிறார்கள். என்ன காரணத்தினால்? பாபம் செய்தவர்களுக்கும்கூட சந்திரமண்டலம் போக வேண்டிய இடமாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதினால்.

அப்படியே கௌஷீதகிகள் வித்யாஸமன்னியில் சொல்கிறார்கள். “எவர்களெல்லாம் இந்த உலகத்திலிருந்து போகிறார்களோ அவர்கள் எல்லோரும் சந்திரனையே அடைகிறார்கள்”, (கௌஷீதகி.1;2) என்று. மறுபடியும் பிறக்கிறவர்களுக்கு சரீரம் ஆரம்பிப்பதும் சந்திரனை அடையாமல் ஏற்படுவதில்லை, “ஐந்தாவது ஆஹுதியில்” என்று ஆஹுதியின் எண்ணிக்கை குறிக்கப்பட்டிருக்கிற படியால்; அதினால் எல்லாருமே சந்திரனை அடைவார்கள்.

யாகம் முதலியது செய்தவர்களுக்கும், மற்றவர்க ளுக்கும் ஸமானமான போக்கையுடைய தன்மை உசிதமில்லையே என்றால், அப்படியல்ல ; மற்றவர்களுக்கு சந்திரமண்டலத்தில் அனுபவம் கிடையாததினால்.