अद्वैतभारती
सूत्रम् ७ஸூத்ரம் 7 / १६16
कार्याधिकरणम्கார்யாதி4கரணம்

कार्यं बादरिरस्य गत्युपपत्तेः ॥ ७ ॥கார்யம் பா3த3ரிரஸ்ய க3த்யுபபத்தே꞉ ॥ 7 ॥

परं ब्रह्माथ वा कार्यमुदङ्मार्गेण गम्यते ॥
मुख्यत्वादमृतत्वोक्तेर्गम्यते परमेव तत् ॥ ९ ॥
कार्यं स्याद्गतियोग्यत्वात्परस्मिंस्तदसम्भवात् ॥
सामीप्याद्ब्रह्मशब्दोक्तिरमृतत्वं क्रमाद्भवेत् ॥ १० ॥
--वैयासिकन्यायमाला
பரம் ப்3ரஹ்மாத2 வா கார்யமுத3ங்மார்கே3ண க3ம்யதே ॥
முக்2யத்வாத3ம்ருதத்வோக்தேர்க3ம்யதே பரமேவ தத் ॥ 9 ॥
கார்யம் ஸ்யாத்3க3தியோக்3யத்வாத்பரஸ்மிம்ஸ்தத3ஸம்ப4வாத் ॥
ஸாமீப்யாத்3ப்3ரஹ்மஶப்3தோ3க்திரம்ருதத்வம் க்ரமாத்3ப4வேத் ॥ 10 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்உத்தர மார்க்கத்தில் பரபிரஹ்மம் அடையப்படுகிறதா? அல்லது கார்ய பிரஹ்மமா? முக்கியமான அர்த்தமாயிருப் பதால், மரணமற்ற தன்மை சொல்லி இருப்பதாலும் அந்த பரபிரஹ்மம் தான் அடையப்படுகிறது.

போவதற்குத் தகுந்ததாயிருப்பதாலும் பரபிரஹ்ம விஷயத்தில் அது (போவது என்பது) ஸம்பவிக்காததினாலும், கார்யம் தான். ஸமீபத்திலிருப்பதால் பிரஹ்மம் என்ற சப்தம் சொல்லப்பட்டிருக்கிறது. கிரமமாக மரணமற்ற தன்மையும் ஏற்படும்
संस्कृतम्
தமிழ்
‘स एनान्ब्रह्म गमयति’ (छा. उ. ४ । १५ । ५) इत्यत्र विचिकित्स्यते — किं कार्यमपरं ब्रह्म गमयति, आहोस्वित्परमेवाविकृतं मुख्यं ब्रह्मेति । कुतः संशयः ? ब्रह्मशब्दप्रयोगात् , गतिश्रुतेश्च । तत्र कार्यमेव सगुणमपरं ब्रह्म एनान्गमयत्यमानवः पुरुष इति बादरिराचार्यो मन्यते । कुतः ? अस्य गत्युपपत्तेः — अस्य हि कार्यब्रह्मणो गन्तव्यत्वमुपपद्यते, प्रदेशवत्त्वात् । न तु परस्मिन्ब्रह्मणि गन्तृत्वं गन्तव्यत्वं गतिर्वा अवकल्पते, सर्वगतत्वात्प्रत्यगात्मत्वाच्च गन्तॄणाम् ॥ ७ ॥‘ஸ ஏநாந்ப்3ரஹ்ம க3மயதி’ (சா2. உ. 4 । 15 । 5) இத்யத்ர விசிகித்ஸ்யதே — கிம் கார்யமபரம் ப்3ரஹ்ம க3மயதி, ஆஹோஸ்வித்பரமேவாவிக்ருதம் முக்2யம் ப்3ரஹ்மேதி । குத꞉ ஸம்ஶய꞉ ? ப்3ரஹ்மஶப்3த3ப்ரயோகா3த் , க3திஶ்ருதேஶ்ச । தத்ர கார்யமேவ ஸகு3ணமபரம் ப்3ரஹ்ம ஏநாந்க3மயத்யமாநவ꞉ புருஷ இதி பா3த3ரிராசார்யோ மந்யதே । குத꞉ ? அஸ்ய க3த்யுபபத்தே꞉ — அஸ்ய ஹி கார்யப்3ரஹ்மணோ க3ந்தவ்யத்வமுபபத்3யதே, ப்ரதே3ஶவத்த்வாத் । ந து பரஸ்மிந்ப்3ரஹ்மணி க3ந்த்ருத்வம் க3ந்தவ்யத்வம் க3திர்வா அவகல்பதே, ஸர்வக3தத்வாத்ப்ரத்யகா3த்மத்வாச்ச க3ந்த்ரூணாம் ॥ 7 ॥
(அர்சிராதி வழியாகச் செல்லும் உபாஸகர்கள் பரபிரஹ்மத்தையடைகிறார்களா, அபரபிரஹ்மத்தை யடைகிறார்களா என்று ஸந்தேஹம். 'அவன் இவர்களை பிரஹ்மத்தையடைவிக்கிறான்' என்ற சுருதியிலுள்ள பிரஹ்மபதம் முக்யவிருத்தியில் பரபிரஹ்மத்தையே குறிக்குமானதாலும் அந்த வழியாக மேலே செல்கிறவன் மரணமற்ற நிலையையடைகிறான், என்று கூறியிருப்ப தாலும் உபாஸகன் பரபிரஹ்மத்தையே அடைகிறான் என்று பூர்வபக்ஷம்.

இங்கு அர்சிராதி மார்க்கம் கூறியிருப்பதால் அவ்வழி சென்று அடைவது பரபிரஹ்மமல்ல. அது எங்குமிருப்பதால் அதை அடைய எங்கும் செல்ல வேண்டியதில்லை. உபாஸகன் பிரஹ்மலோகம் சென்று அங்கு தத்வஞானம் பெற்று முக்தியடைகிறான் என்ற கிரமமுக்தியைக் கொண்டு மரணமற்றநிலை என்று சுருதி கூறுகிறது. பிரஹ்மலோகம் சென்றவன் திரும்பிவராமல் கட்டாயம் முக்தியடைவதால் பிரஹ்மத்திற்கு சமீபத்தில் இருப்பதால் அதையும் பிரஹ்மம் என்றே கூறுகிறது. உபாஸகன் அடைவது அபரபிரஹ்மம் தான் பரபிரஹ்ம மல்ல என்று ஸித்தாந்தம்).

“அவன் இவர்களை பிரஹ்மத்தை அடைச் செய்கிறான்" (சாந்.IV-15-5) என்றவிடத்தில் கார்யமான கீழான பிரஹ்மத்தை அடைச்செய்கிறானா? அல்லது மாறுதலடையாத முக்கியமான பிரஹ்மத்தையேயா? என்று ஆலோசிக்கப்படுகிறது. ஏன் ஸந்தேஹம்? பிரஹ்ம சப்தப் பிரயோகம் செய்திருப்பதினாலும், அடைவது சொல்லியி ருப்பதினாலும், அதில் மானவனல்லாத புருஷன் “கார்யம்” குணத்துடன் கூடிய கீழப்பட்ட பிரஹ்மத்தை இவர்களை யடையச் செய்கிறான் என்று பாதரியென்ற ஆசார்யார் அபிப்பிராயப்படுகிறார். ஏன்? "இவருக்கு அடைதல் பொருத்தமாகுமாதலால்”. இந்த கார்யப் பிரஹ்மத்திற்கு அல்லவா தனித்து இடமுள்ள தன்மையிருப்பதால், அடை யக்கூடிய தன்மை பொருத்தமாகும்? பரப்பிரஹ்மத்திலோ, போகிறவன் என்ற தன்மை, அடையத்தக்கவர் என்ற தன்மை, போக்கு, எதுவும் பொருந்தாது, எங்குமிருப்பதாலும், போகிற வர்களுடைய உள்ளேயுள்ள ஆத்மாவாயிருப் பதாலும்.