अद्वैतभारती
सूत्रम् ९ஸூத்ரம் 9 / ४१41
कर्मानुस्मृतिशब्दविध्यधिकरणम्கர்மாநுஸ்ம்ருதிஶப்3த3வித்4யதி4கரணம்

स एव तु कर्मानुस्मृतिशब्दविधिभ्यः ॥ ९ ॥ஸ ஏவ து கர்மாநுஸ்ம்ருதிஶப்3த3விதி4ப்4ய꞉ ॥ 9 ॥

यः कोऽप्यनियमेनात्र बुध्यते सुप्त एव वा ॥
उदबिन्दुरिवाशक्तेर्नियन्तुं कोऽपि बुध्यते ॥ ५ ॥
कर्माविद्यापरिच्छेदादुदबिन्दुविलक्षणः ॥
स एव बुध्यते शास्त्रात्तदुपाधेः पुनर्भवात् ॥ ६ ॥
--वैयासिकन्यायमाला
ய꞉ கோ(அ)ப்யநியமேநாத்ர பு3த்4யதே ஸுப்த ஏவ வா ॥
உத3பி3ந்து3ரிவாஶக்தேர்நியந்தும் கோ(அ)பி பு3த்4யதே ॥ 5 ॥
கர்மாவித்3யாபரிச்சே2தா3து3த3பி3ந்து3விலக்ஷண꞉ ॥
ஸ ஏவ பு3த்4யதே ஶாஸ்த்ராத்தது3பாதே4꞉ புநர்ப4வாத் ॥ 6 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்இங்கு நியமமன்னியில் யாரேனும் ஒருவன் விழித்துக் கொள்கிறானா, அல்லது தூங்கினவனேதானா? ஜலத்துளி போல, நியமனம் செய்ய முடியாததினால் யாரோதான் விழித் துக்கொள்கிறான்.

கர்மம், அவித்யை என்பவைகளால் துண்டுபட்டிருப் பதால், ஜலத்துளிக்கு வேறுபட்டவன். அவனுடைய உபாதி மறுபடியும் இருப்பதாலும், சாஸ்திரத்தினாலும், அவனேதான் விழித்துக் கொள்கிறான்.
संस्कृतम्
தமிழ்
तस्याः पुनः सत्सम्पत्तेः प्रतिबुध्यमानः किं य एव सत्सम्पन्नः स एव प्रतिबुध्यते, उत स वा अन्यो वा इति चिन्त्यते । तत्र प्राप्तं तावत् — अनियम इति । कुतः ? यदा हि जलराशौ कश्चिज्जलबिन्दुः प्रक्षिप्यते, जलराशिरेव स तदा भवति, पुनरुद्धरणे च स एव जलबिन्दुर्भवति इति दुःसम्पादम् — तद्वत् सुप्तः परेणैकत्वमापन्नः सम्प्रसीदतीति न स एव पुनरुत्थातुमर्हति; तस्मात् स एव ईश्वरो वा अन्यो वा जीवः प्रतिबुध्यते इति ॥தஸ்யா꞉ புந꞉ ஸத்ஸம்பத்தே꞉ ப்ரதிபு3த்4யமாந꞉ கிம் ய ஏவ ஸத்ஸம்பந்ந꞉ ஸ ஏவ ப்ரதிபு3த்4யதே, உத ஸ வா அந்யோ வா இதி சிந்த்யதே । தத்ர ப்ராப்தம் தாவத் — அநியம இதி । குத꞉ ? யதா3 ஹி ஜலராஶௌ கஶ்சிஜ்ஜலபி3ந்து3꞉ ப்ரக்ஷிப்யதே, ஜலராஶிரேவ ஸ ததா3 ப4வதி, புநருத்3த4ரணே ச ஸ ஏவ ஜலபி3ந்து3ர்ப4வதி இதி து3꞉ஸம்பாத3ம் — தத்3வத் ஸுப்த꞉ பரேணைகத்வமாபந்ந꞉ ஸம்ப்ரஸீத3தீதி ந ஸ ஏவ புநருத்தா2துமர்ஹதி; தஸ்மாத் ஸ ஏவ ஈஶ்வரோ வா அந்யோ வா ஜீவ꞉ ப்ரதிபு3த்4யதே இதி ॥
एवं प्राप्ते, इदमाह — स एव तु जीवः सुप्तः स्वास्थ्यं गतः पुनरुत्तिष्ठति, नान्यः । कस्मात् ? कर्मानुस्मृतिशब्दविधिभ्यः । विभज्य हेतुं दर्शयिष्यामि । कर्मशेषानुष्ठानदर्शनात्तावत्स एवोत्थातुमर्हति नान्यः । तथा हि — पूर्वेद्युरनुष्ठितस्य कर्मणः अपरेद्युः शेषमनुतिष्ठन्दृश्यते । न चान्येन सामिकृतस्य कर्मणः अन्यः शेषक्रियायां प्रवर्तितुमुत्सहते, अतिप्रसङ्गात् । तस्मादेक एव पूर्वेद्युरपरेद्युश्च एकस्य कर्मणः कर्तेति गम्यते ।ஏவம் ப்ராப்தே, இத3மாஹ — ஸ ஏவ து ஜீவ꞉ ஸுப்த꞉ ஸ்வாஸ்த்2யம் க3த꞉ புநருத்திஷ்ட2தி, நாந்ய꞉ । கஸ்மாத் ? கர்மாநுஸ்ம்ருதிஶப்3த3விதி4ப்4ய꞉ । விப4ஜ்ய ஹேதும் த3ர்ஶயிஷ்யாமி । கர்மஶேஷாநுஷ்டா2நத3ர்ஶநாத்தாவத்ஸ ஏவோத்தா2துமர்ஹதி நாந்ய꞉ । ததா2 ஹி — பூர்வேத்3யுரநுஷ்டி2தஸ்ய கர்மண꞉ அபரேத்3யு꞉ ஶேஷமநுதிஷ்ட2ந்த்3ருஶ்யதே । ந சாந்யேந ஸாமிக்ருதஸ்ய கர்மண꞉ அந்ய꞉ ஶேஷக்ரியாயாம் ப்ரவர்திதுமுத்ஸஹதே, அதிப்ரஸங்கா3த் । தஸ்மாதே3க ஏவ பூர்வேத்3யுரபரேத்3யுஶ்ச ஏகஸ்ய கர்மண꞉ கர்தேதி க3ம்யதே ।
इतश्च स एवोत्तिष्ठति, यत्कारणम् अतीतेऽहनि अहमदोऽद्राक्षमिति पूर्वानुभूतस्य पश्चात्स्मरणम् अन्यस्योत्थाने नोपपद्यते । न ह्यन्यदृष्टम् अन्योऽनुस्मर्तुमर्हति । सोऽहमस्मीति च आत्मानुस्मरणमात्मान्तरोत्थाने नावकल्पते । शब्देभ्यश्च तस्यैवोत्थानमवगम्यते । तथा हि —‘पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति बुद्धान्तायैव’ (बृ. उ. ४ । ३ । १६)‘इमाः सर्वाः प्रजा अहरहर्गच्छन्त्य एतं ब्रह्मलोकं न विन्दन्ति’ (छा. उ. ८ । ३ । २)‘त इह व्याघ्रो वा सिꣳहो वा वृको वा वराहो वा कीटो वा पतङ्गो वा दꣳशो वा मशको वा यद्यद्भवन्ति तदाभवन्ति’ (छा. उ. ६ । ९ । ३)इत्येवमादयः शब्दाः स्वापप्रबोधाधिकारपठिता न आत्मान्तरोत्थाने सामञ्जस्यम् ईयुः ।இதஶ்ச ஸ ஏவோத்திஷ்ட2தி, யத்காரணம் அதீதே(அ)ஹநி அஹமதோ3(அ)த்3ராக்ஷமிதி பூர்வாநுபூ4தஸ்ய பஶ்சாத்ஸ்மரணம் அந்யஸ்யோத்தா2நே நோபபத்3யதே । ந ஹ்யந்யத்3ருஷ்டம் அந்யோ(அ)நுஸ்மர்துமர்ஹதி । ஸோ(அ)ஹமஸ்மீதி ச ஆத்மாநுஸ்மரணமாத்மாந்தரோத்தா2நே நாவகல்பதே । ஶப்3தே3ப்4யஶ்ச தஸ்யைவோத்தா2நமவக3ம்யதே । ததா2 ஹி —‘புந꞉ ப்ரதிந்யாயம் ப்ரதியோந்யாத்3ரவதி பு3த்3தா4ந்தாயைவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 16)‘இமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா அஹரஹர்க3ச்ச2ந்த்ய ஏதம் ப்3ரஹ்மலோகம் ந விந்த3ந்தி’ (சா2. உ. 8 । 3 । 2)‘த இஹ வ்யாக்4ரோ வா ஸிꣳஹோ வா வ்ருகோ வா வராஹோ வா கீடோ வா பதங்கோ3 வா த3ꣳஶோ வா மஶகோ வா யத்3யத்3ப4வந்தி ததா3ப4வந்தி’ (சா2. உ. 6 । 9 । 3)இத்யேவமாத3ய꞉ ஶப்3தா3꞉ ஸ்வாபப்ரபோ3தா4தி4காரபடி2தா ந ஆத்மாந்தரோத்தா2நே ஸாமஞ்ஜஸ்யம் ஈயு꞉ ।
कर्मविद्याविधिभ्यश्चैवमेवावगम्यते । अन्यथा हि कर्मविद्याविधयोऽनर्थकाः स्युः । अन्योत्थानपक्षे हि सुप्तमात्रो मुच्यत इत्यापद्येत । एवं चेत्स्यात् , वद किं कालान्तरफलेन कर्मणा विद्यया वा कृतं स्यात् ? अपि च अन्योत्थानपक्षे यदि तावच्छरीरान्तरे व्यवहरमाणो जीव उत्तिष्ठेत् , तत्रत्यव्यवहारलोपप्रसङ्गः स्यात् । अथ तत्र सुप्त उत्तिष्ठेत् , कल्पनानर्थक्यं स्यात् । यो हि यस्मिन् शरीरे सुप्तः सः तस्मिन् नोत्तिष्ठति, अन्यस्मिन् शरीरे सुप्तः अन्यस्मिन्नुत्तिष्ठतीति कोऽस्याम् कल्पनायां लाभः स्यात् ?கர்மவித்3யாவிதி4ப்4யஶ்சைவமேவாவக3ம்யதே । அந்யதா2 ஹி கர்மவித்3யாவித4யோ(அ)நர்த2கா꞉ ஸ்யு꞉ । அந்யோத்தா2நபக்ஷே ஹி ஸுப்தமாத்ரோ முச்யத இத்யாபத்3யேத । ஏவம் சேத்ஸ்யாத் , வத3 கிம் காலாந்தரப2லேந கர்மணா வித்3யயா வா க்ருதம் ஸ்யாத் ? அபி ச அந்யோத்தா2நபக்ஷே யதி3 தாவச்ச2ரீராந்தரே வ்யவஹரமாணோ ஜீவ உத்திஷ்டே2த் , தத்ரத்யவ்யவஹாரலோபப்ரஸங்க3꞉ ஸ்யாத் । அத2 தத்ர ஸுப்த உத்திஷ்டே2த் , கல்பநாநர்த2க்யம் ஸ்யாத் । யோ ஹி யஸ்மிந் ஶரீரே ஸுப்த꞉ ஸ꞉ தஸ்மிந் நோத்திஷ்ட2தி, அந்யஸ்மிந் ஶரீரே ஸுப்த꞉ அந்யஸ்மிந்நுத்திஷ்ட2தீதி கோ(அ)ஸ்யாம் கல்பநாயாம் லாப4꞉ ஸ்யாத் ?
अथ मुक्त उत्तिष्ठेत् , अन्तवान्मोक्ष आपद्येत । निवृत्ताविद्यस्य च पुनरुत्थानमनुपपन्नम् । एतेन ईश्वरस्योत्थानं प्रत्युक्तम् , नित्यनिवृत्ताविद्यत्वात् । अकृताभ्यागमकृतविप्रणाशौ च दुर्निवारावन्योत्थानपक्षे स्याताम् । तस्मात्स एवोत्तिष्ठति, नान्य इति ।அத2 முக்த உத்திஷ்டே2த் , அந்தவாந்மோக்ஷ ஆபத்3யேத । நிவ்ருத்தாவித்3யஸ்ய ச புநருத்தா2நமநுபபந்நம் । ஏதேந ஈஶ்வரஸ்யோத்தா2நம் ப்ரத்யுக்தம் , நித்யநிவ்ருத்தாவித்3யத்வாத் । அக்ருதாப்4யாக3மக்ருதவிப்ரணாஶௌ ச து3ர்நிவாராவந்யோத்தா2நபக்ஷே ஸ்யாதாம் । தஸ்மாத்ஸ ஏவோத்திஷ்ட2தி, நாந்ய இதி ।
यत्पुनरुक्तम् — यथा जलराशौ प्रक्षिप्तो जलबिन्दुर्नोद्धर्तुं शक्यते, एवं सति सम्पन्नो जीवो नोत्पतितुमर्हतीति, तत्परिह्रियते — युक्तं तत्र विवेककारणाभावात् जलबिन्दोरनुद्धरणम् , इह तु विद्यते विवेककारणम् — कर्म च अविद्या च, इति वैषम्यम् । दृश्यते च दुर्विवेचनयोरप्यस्मज्जातीयैः क्षीरोदकयोः संसृष्टयोः हंसेन विवेचनम् ।யத்புநருக்தம் — யதா2 ஜலராஶௌ ப்ரக்ஷிப்தோ ஜலபி3ந்து3ர்நோத்3த4ர்தும் ஶக்யதே, ஏவம் ஸதி ஸம்பந்நோ ஜீவோ நோத்பதிதுமர்ஹதீதி, தத்பரிஹ்ரியதே — யுக்தம் தத்ர விவேககாரணாபா4வாத் ஜலபி3ந்தோ3ரநுத்3த4ரணம் , இஹ து வித்3யதே விவேககாரணம் — கர்ம ச அவித்3யா ச, இதி வைஷம்யம் । த்3ருஶ்யதே ச து3ர்விவேசநயோரப்யஸ்மஜ்ஜாதீயை꞉ க்ஷீரோத3கயோ꞉ ஸம்ஸ்ருஷ்டயோ꞉ ஹம்ஸேந விவேசநம் ।
अपि च न जीवो नाम कश्चित्परस्मादन्यो विद्यते, यो जलबिन्दुरिव जलराशेः सतो विविच्येत । सदेव तु उपाधिसम्पर्काज्जीव इत्युपचर्यते इत्यसकृत्प्रपञ्चितम् । एवं सति यावदेकोपाधिगता बन्धानुवृत्तिः, तावदेकजीवव्यवहारः । उपाध्यन्तरगतायां तु बन्धानुवृत्तौ जीवान्तरव्यवहारः । स एवायमुपाधिः स्वापप्रबोधयोः बीजाङ्कुरन्यायेन — इत्यतः स एव जीवः प्रतिबुध्यत इति युक्तम् ॥ ९ ॥அபி ச ந ஜீவோ நாம கஶ்சித்பரஸ்மாத3ந்யோ வித்3யதே, யோ ஜலபி3ந்து3ரிவ ஜலராஶே꞉ ஸதோ விவிச்யேத । ஸதே3வ து உபாதி4ஸம்பர்காஜ்ஜீவ இத்யுபசர்யதே இத்யஸக்ருத்ப்ரபஞ்சிதம் । ஏவம் ஸதி யாவதே3கோபாதி4க3தா ப3ந்தா4நுவ்ருத்தி꞉, தாவதே3கஜீவவ்யவஹார꞉ । உபாத்4யந்தரக3தாயாம் து ப3ந்தா4நுவ்ருத்தௌ ஜீவாந்தரவ்யவஹார꞉ । ஸ ஏவாயமுபாதி4꞉ ஸ்வாபப்ரபோ3த4யோ꞉ பீ3ஜாங்குரந்யாயேந — இத்யத꞉ ஸ ஏவ ஜீவ꞉ ப்ரதிபு3த்4யத இதி யுக்தம் ॥ 9 ॥
(ஸுஷுப்தியில் எந்த ஜீவன் பிரஹ்மத்துடன் ஒன்றாகச் சேருகிறானோ அவனே ஜாக்ரத்தில் விழித்துக் கொள்கிறானா அல்லது எவனாவது ஒரு ஜீவனா என்று ஸந்தேஹம். எப்படி சொம்பிலுள்ள கங்கா தீர்த்தத்தின் ஒரு திவலையை கிணற்று ஜலத்துடன் சேர்த்துவிட்டால் அதே திவலையை கிணற்று ஜலத்திலிருந்து பிரித்து எடுக்க முடியாதோ, அதுபோல ஒரு ஜீவன் நல்ல தூக்கத்தில் பிரஹ்மத்துடன் ஒன்றுசேரும் பொழுது பல ஜீவர்கள் அங்கு ஒன்றுசேர்ந்திருப்பதால் தூங்கின அதே ஜீவன்தான் அந்த சரீரத்தில் விழித்துக் கொள்கிறான் என்று கூற முடியாது. ஆகையால் எவனாவது ஒருவன் விழித்துக் கொள்கிறான் என்று பூர்வபக்ஷம்.

கிணற்று ஜலத்துடன் ஒன்று சேர்ந்த கங்கா ஜலத்திவலையை தனியாக பிரித்தெடுப்பதற்கு வழி யில்லை. ஆனால் கங்காஜலம் நிறைந்த சொம்பை நன்றாக மூடி கிணற்றுக்குள் போட்டால் அந்த சொம்பை எடுக்கும் பொழுது கங்கா ஜலத்தையும் தனியாக எடுத்து விடலாம். இதேபோல கர்மா அவித்யை இவைகளால் சூழப்பட்டு ஜீவன் ஸுஷுப்தியில் பிரஹ்மத்துடன் ஒன்று சேருவதால் பிரிப்பதற்கு காரணமிருப்பதால் அதே ஜீவன்தான் விழித்துக் கொள்கிறான். முந்தின தினம் செய்துமுடிக் காமல் விட்டிருந்த காரியத்தை மறுநாள் தொடர்ந்து செய்வது அதே ஜீவன் விழித்துக் கொண்டால்தான் முடியும். மேலும் முந்தினதினம் பார்த்ததை நிறைவு கூர்வதும், அவனே நான் என்று நினைப்பதும், விழிப்பவன் வேறு ஜீவனானால் பொருந்தாது. புலி சரீரத்தில் உள்ள ஜீவன் தூங்கினால் புலி சரீரத்தில்தான் விழித்துக் கொள்கிறான் என்ற சுருதி இதையே கூறுகிறது.

தூங்கினவன் வேறு, விழித்துக் கொள்கிறவன் வேறு என்றிருந்தால் வேதத்தில் விதிக்கப்பட்ட கர்மாவுக்கும், உபாஸனத்திற்கும் பலனில்லாமல் போய்விடும். ஆகையால் தூங்குகிற ஜீவன்தான் விழித்துக்கொள்கிறான் என்று ஸித்தாந்தம்).

அந்த ஸத்வஸ்துவை அடைந்ததிலிருந்து விழித்துக்கொள்கிறவன் - எவன் ஸத்வஸ்துவை அடைந்தானோ அவனே விழித்துக்கொள்கிறானா? அல்லது அவனோ வேறு ஒருவனோ விழித்துக் கொள்கிறானா என்று சிந்திக்கப்படுகிறது.

பூர்வபக்ஷம்: அதில் நியமம் இல்லை என்று ஏற்படுகிறது. ஏன்? எப்பொழுது ஜலராசியில் ஒரு ஜலத்திவிலைவிடப்படுகிறதோ, அப்பொழுது அதுவும் ஜலராசியாகவே ஆகிவிடுகிறது; மறுபடியும் எடுக்கும் போது அதே ஜலபிந்துவாக இருக்கும் என்பது ஸாத்திய மில்லையே? அதுபோல தூங்குகிறவன் பரபிரஹ்மத்துடன் ஒன்றாயிருக்கும் தன்மையையடைந்து நன்கு தெளிந்து விடுவதால், மறுபடியும் அவனே எழுந்திருப்பது நியாய மாகாது. ஆகையால், அவனோ, ஈசுவரனோ, அல்லது வேறு ஒரு ஜீவனோ விழித்துக்கொள்கிறான், என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது இதைச் சொல்கிறார். “அவனேதான்” தூங்கி தன் ஸ்தானத்திலி ருக்கும் தன்மையை அடைந்த ஜீவன்தான், மறுபடியும் எழுந்திருக்கிறான், வேறு யாருமில்லை ஏன்? "கர்மா, அனுஸ்மிருதி, சப்தம், விதி, இவைகளிலிருந்து” இந்தக் காரணத்தைப் பிரித்துக் காட்டுகிறேன்.

மீதி காரியத்தைச் செய்வது காண்பதால், அவனேதான் எழுந்திருப்பது நியாயம், வேறு ஜீவன் அல்ல. அப்படியே முந்தின நாளில் செய்யப்பட்ட கார்யத்தில் பாக்கியுள்ளதை மறுநாள் செய்கிறான் என்பது பார்க்கப்படுகிறது. வேறு ஒருவனால் பாதி செய்யப்பட்டி ருக்கும் காரியத்திலுள்ள பாக்கியை செய்வதில் வேறு ஒருவன் பிரவிருத்திப்பது நியாயமில்லை. அதிபிரஸங்கம் வருவதால்; ஆகையால் ஒருவனே தான் முந்தின நாளிலும் பிந்தின நாளிலும் ஒரு கர்மாவை செய்கிறவன் என்று தெரிகிறது.
முந்தின தினம் நான் அதைப்பார்த்தேன் என்று முன்னால் அனுபவித்ததற்குப்பின் நினைவு ஏற்படுவது, வேறொருவன் விழித்து எழுந்திருந்தால் பொருத்தமாகாது என்ற எந்த காரணமோ அதினாலும் அவனேதான் விழித்துக்கொள்கிறான். ஒருவன் பார்த்ததை வேறொருவன் ஸ்மரிக்க முடியாதல்லவா? “அவனே நான்” என்கிற தன்னைப்பற்றின ஸ்மரணமும் வேறு ஆத்மா எழுந்திருந் தால் பொருத்தமாகாது.

சப்தங்களிலிருந்தும் அவனுக்கேதான் எழுந்தி ருப்பது என்று தெரிகிறது, அப்படியே, "மறுபடியும் போன கிரமப்படி அந்தந்த இந்திரிய ஸ்தானத்திற்கு விழிப்பையே உத்தேசித்து ஓடிவருகின்றன” (பிருஹத்.IV;3-16), “எல்லா பிராணிகளும் பிரதி தினம் இந்த பிரஹ்மமாகிற லோகத்தை அடைகிறவர்கள் அறிவதில்லை" (சாந்.VIII;3-2), "அவர்கள் இங்கே வேங்கையோ, ஸிம்ஹமோ, சென்னாயோ, பன்றியோ, புழுவோ, விட்டில் பூச்சியோ, காட்டுஈயோ, கொசுவோ எது எதுவாக இருக்கிறதோ, அது அதுவாகவே ஏற்படுகிறது” (சாந்.VI;9-3) என்பது முதலான சப்தங்கள், தூங்கி விழிக்கிற பிரகரணத்தில் சொல்லப்பட்டிருப்பவைகள், வேறு ஆத்மா எழுந்திருப்ப தானால் பொருந்தாது.
கர்மா உபாஸனை இவைகளை சொல்லும் விதிகளிலிருந்தும் இவ்விதமே தான் அறியப்படுகிறது. வேறு விதமாய் இருந்தால் கர்மா உபாஸனை விதிகள் பலனற்றவைகளாக போய்விடுமல்லவா? வேறொருவன் எழுந்திருக்கிறான் என்ற பக்ஷத்தில், தூங்குவதினாலேயே முக்தியடைகிறான் என்றல்லவா ஏற்பட்டுவிடும்? அப்படி யிருந்தால், பின் காலத்தில் பலனைக் கொடுக்கும் கர்மா வினாலேயோ உபாஸனையினாலேயோ என்ன செய்ததாக ஆகும் சொல்லு.

மேலும் வேறொருவன் எழுந்திருக்கிறான் என்கிற பக்ஷத்தில், வேறொரு சரீரத்தில் வியவஹாரம் செய்து கொண்டு இருந்த ஜீவன் இங்கு எழுந்திருந்தால், அங்குள்ள வியவஹாரம் விட்டுப்போகும்படி ஏற்படும். அல்லது, அங்கே தூங்கினவன் எழுந்திருக்கிறான் என்றால் கற்பனை செய்வது அர்த்தமற்றது. எவன் எந்த சரீரத்தில் தூங்கினானோ அவன் அந்த சரீரத்தில் எழுந்திருப்ப தில்லை. வேறு சரீரத்தில் தூங்கினவன் மற்றொரு சரீரத்தில் எழுந்திருக்கிறான், என்ற இவ்வித கற்பனையில் என்ன லாபம்?
மேலும் முக்தியடைந்தவன் எழுந்தால், மோக்ஷம் முடிவு உள்ளதாக ஆகும். அவித்யை விலகினவனுக்கு மறுபடியும் எழுந்திருத்தல் பொருத்தமில்லை.

இதினால் ஈசுவரன் எழுந்திருக்கிறான் என்பது பதில் சொல்லப்பட்டுவிட்டது, எப்பொழுதுமே அவித்யை நிவிருத்தியானவராதலால்.

செய்யாததற்கு பலன் வருகிறது, செய்ததற்கு பலன் இல்லாமல் போய்விடுகிறது, என்ற தோஷங்களும், வேறொருவன் எழுந்திருக்கிறானென்ற பக்ஷத்தில் விலக்க முடியாததாக ஆகும்.

ஆகையால் அவனேதான் எழுந்திருக்கிறான், வேறு யாரும் இல்லை என்று
ஜலராசியில் விடப்பட்ட ஜலபிந்துவை மறுபடியும் எடுக்க எப்படி முடியாதோ, அப்படியே ஸத்வஸ்துவுடன் சேர்ந்து கொண்ட ஜீவன் வெளிவர முடியாது, என்று எது சொல்லப்பட்டதோ, அது பரிஹரிக்கப்படுகிறது; அங்கே பிரித்து எடுக்கக் காரணமில்லாததினால் ஜலபிந்துவை எடுக்க முடியாதது நியாயம், இங்கேயோ பிரித்தெடுக்கக் காரணமாக கர்மாவும், அவித்யையும் இருக்கிறது என்பதினால் வித்தியாஸம். மேலும் நம் போலுள்ள வர்களால் பிரித்தெடுக்க முடியாதபோதிலும், பாலும், ஜலமும் கலந்திருப்பதை ஹம்ஸத்தினால் பிரித்தெடுக்க முடிவது காணப்படுகிறது.
மேலும், ஜலராசியிலிருந்து ஜலபிந்து போல, ஸத்வஸ்துவிலிருந்து பிரிக்கக்கூடியதாய், பரபிரஹ் மத்தைத் தவிர வேறாக, ஜீவன் என்று யாரும் கிடையாது. ஸத்வஸ்துவே தான் உபாதிகளின் சேர்க்கையால் ஜீவன் என்று உபசாரமாக சொல்லப்படுகிறதென்று அடிக்கடி விஸ்தாரமாக சொல்லப் பட்டிருக்கிறது.

இவ்விதமிருப்பதால், எதுவரை ஒரு உபாதியிலுள்ள பந்தத்தின் துடர்ச்சியிருக்கிறதோ, அதுவரை ஒரு ஜீவனுடைய வியவஹாரம். வேறொரு உபாதியில் பந்தத்தின் துடர்ச்சியிருந்தால் வேறு ஜீவனுடைய வியவஹாரம். அதே இந்த (புத்தி) உபாதிதான் தூக்கத்திலும், விழிப்பிலும் விதைமுளையென்ற நியாயப்படிக்கு என்று. இதினால் அதே ஜீவன்தான் விழித்துக் கொள்கிறான் என்பது பொருத்தமாயுள்ளது.