अद्वैतभारती
सूत्रम् २४ஸூத்ரம் 24 / ३२32
वैश्वानराधिकरणम्வைஶ்வாநராதி4கரணம்

वैश्वानरः साधारणशब्दविशेषात् ॥ २४ ॥வைஶ்வாநர꞉ ஸாதா4ரணஶப்3த3விஶேஷாத் ॥ 24 ॥

वैश्वानरः कौक्षभूतदेवजीवेश्वरेषु कः ॥
वैश्वानरात्मशब्दाभ्यामीश्वरान्येषु कश्चन ॥ १३ ॥
द्युमूर्धत्वादितो ब्रह्मशब्दाच्चेश्वर इष्यते ॥
वैश्वानरात्मशब्दौ तावीश्वरस्यापि वाचकौ ॥ १४ ॥
--वैयासिकन्यायमाला
வைஶ்வாநர꞉ கௌக்ஷபூ4ததே3வஜீவேஶ்வரேஷு க꞉ ॥
வைஶ்வாநராத்மஶப்3தா3ப்4யாமீஶ்வராந்யேஷு கஶ்சந ॥ 13 ॥
த்3யுமூர்த4த்வாதி3தோ ப்3ரஹ்மஶப்3தா3ச்சேஶ்வர இஷ்யதே ॥
வைஶ்வாநராத்மஶப்3தௌ3 தாவீஶ்வரஸ்யாபி வாசகௌ ॥ 14 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்வைசுவாநரர் என்பது ஜாடராக்னி, (பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய) பூத அக்னி, அக்னி தேவதை, ஜீவன், ஈசுவரர் இவைகளில் யார்? வைசுவாநரர் என்றும் "ஆத்மா” என்று முள்ள இரண்டு சப்தங்களால் ஈசுவரரைத் தவிர்த்து மற்ற வைகளில் ஏதேனும் ஒன்று.

த்யுலோகத்தை சிரஸாகவுடையது என்பதிருப்பதி னாலும் பிரஹ்மம் என்ற சப்தம் இருப்பதினாலும் ஈசுவரர்தான் என்று கருதப்படுகிறது. அந்த “வைசுவாநரர்", "ஆத்மா” என்ற இரண்டு சப்தங்களும் பிரஹ்மத்தையும் சொல்லும் வார்த்தைகளே.
संस्कृतम्
தமிழ்
‘को न आत्मा किं ब्रह्म’ (छा. उ. ५ । ११ । १)इति‘आत्मानमेवेमं वैश्वानरं सम्प्रत्यध्येषि तमेव नो ब्रूहि’ (छा. उ. ५ । ११ । ६)इति चोपक्रम्य द्युसूर्यवाय्वाकाशवारिपृथिवीनां सुतेजस्त्वादिगुणयोगमेकैकोपासननिन्दया च वैश्वानरं प्रत्येषां मूर्धादिभावमुपदिश्याम्नायते —‘यस्त्वेतमेवं प्रादेशमात्रमभिविमानमात्मानं वैश्वानरमुपास्ते, स सर्वेषु लोकेषु सर्वेषु भूतेषु सर्वेष्वात्मस्वन्नमत्ति;’ (छा. उ. ५ । १८ । १),‘तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाश्चक्षुर्विश्वरूपः प्राणः पृथग्वर्त्मात्मा सन्देहो बहुलो वस्तिरेव रयिः पृथिव्येव पादावुर एव वेदिर्लोमानि बर्हिर्हृदयं गार्हपत्यो मनोऽन्वाहार्यपचन आस्यमाहवनीयः’ (छा. उ. ५ । १८ । २)इत्यादि ।‘கோ ந ஆத்மா கிம் ப்3ரஹ்ம’ (சா2. உ. 5 । 11 । 1)இதி‘ஆத்மாநமேவேமம் வைஶ்வாநரம் ஸம்ப்ரத்யத்4யேஷி தமேவ நோ ப்3ரூஹி’ (சா2. உ. 5 । 11 । 6)இதி சோபக்ரம்ய த்3யுஸூர்யவாய்வாகாஶவாரிப்ருதி2வீநாம் ஸுதேஜஸ்த்வாதி3கு3ணயோக3மேகைகோபாஸநநிந்த3யா ச வைஶ்வாநரம் ப்ரத்யேஷாம் மூர்தா4தி3பா4வமுபதி3ஶ்யாம்நாயதே —‘யஸ்த்வேதமேவம் ப்ராதே3ஶமாத்ரமபி4விமாநமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே, ஸ ஸர்வேஷு லோகேஷு ஸர்வேஷு பூ4தேஷு ஸர்வேஷ்வாத்மஸ்வந்நமத்தி;’ (சா2. உ. 5 । 18 । 1),‘தஸ்ய ஹ வா ஏதஸ்யாத்மநோ வைஶ்வாநரஸ்ய மூர்தை4வ ஸுதேஜாஶ்சக்ஷுர்விஶ்வரூப꞉ ப்ராண꞉ ப்ருத2க்3வர்த்மாத்மா ஸந்தே3ஹோ ப3ஹுலோ வஸ்திரேவ ரயி꞉ ப்ருதி2வ்யேவ பாதா3வுர ஏவ வேதி3ர்லோமாநி ப3ர்ஹிர்ஹ்ருத3யம் கா3ர்ஹபத்யோ மநோ(அ)ந்வாஹார்யபசந ஆஸ்யமாஹவநீய꞉’ (சா2. உ. 5 । 18 । 2)இத்யாதி3 ।
तत्र संशयः — किं वैश्वानरशब्देन जाठरोऽग्निरुपदिश्यते, उत भूताग्निः, अथ तदभिमानिनी देवता, अथवा शारीरः, आहोस्वित्परमेश्वरः इति । किं पुनरत्र संशयकारणम् ? वैश्वानर इति जाठरभूताग्निदेवतानां साधारणशब्दप्रयोगात् , आत्मेति च शारीरपरमेश्वरयोः । तत्र कस्योपादानं न्याय्यं कस्य वा हानमिति भवति संशयः । किं तावत्प्राप्तम् ? जाठरोऽग्निरिति । कुतः ? तत्र हि विशेषेण क्वचित्प्रयोगो दृश्यते —‘अयमग्निर्वैश्वानरो योऽयमन्तः पुरुषे येनेदमन्नं पच्यते यदिदमद्यते’ (बृ. उ. ५ । ९ । १)इत्यादौ ।தத்ர ஸம்ஶய꞉ — கிம் வைஶ்வாநரஶப்3தே3ந ஜாட2ரோ(அ)க்3நிருபதி3ஶ்யதே, உத பூ4தாக்3நி꞉, அத2 தத3பி4மாநிநீ தே3வதா, அத2வா ஶாரீர꞉, ஆஹோஸ்வித்பரமேஶ்வர꞉ இதி । கிம் புநரத்ர ஸம்ஶயகாரணம் ? வைஶ்வாநர இதி ஜாட2ரபூ4தாக்3நிதே3வதாநாம் ஸாதா4ரணஶப்3த3ப்ரயோகா3த் , ஆத்மேதி ச ஶாரீரபரமேஶ்வரயோ꞉ । தத்ர கஸ்யோபாதா3நம் ந்யாய்யம் கஸ்ய வா ஹாநமிதி ப4வதி ஸம்ஶய꞉ । கிம் தாவத்ப்ராப்தம் ? ஜாட2ரோ(அ)க்3நிரிதி । குத꞉ ? தத்ர ஹி விஶேஷேண க்வசித்ப்ரயோகோ3 த்3ருஶ்யதே —‘அயமக்3நிர்வைஶ்வாநரோ யோ(அ)யமந்த꞉ புருஷே யேநேத3மந்நம் பச்யதே யதி3த3மத்3யதே’ (ப்3ரு. உ. 5 । 9 । 1)இத்யாதௌ3 ।
अग्निमात्रं वा स्यात् , सामान्येनापि प्रयोगदर्शनात् —‘विश्वस्मा अग्निं भुवनाय देवा वैश्वानरं केतुमह्नामकृण्वन्’ (ऋ. सं. १० । ८८ । १२)इत्यादौ । अग्निशरीरा वा देवता स्यात् , तस्यामपि प्रयोगदर्शनात् —‘वैश्वानरस्य सुमतौ स्याम राजा हि कं भुवनानामभिश्रीः’ (ऋ. सं. १ । ९८ । १)इत्येवमाद्यायाः श्रुतेर्देवतायामैश्वर्याद्युपेतायां सम्भवात् । अथात्मशब्दसामानाधिकरण्यादुपक्रमे च ‘को न आत्मा किं ब्रह्म’ इति केवलात्मशब्दप्रयोगादात्मशब्दवशेन वैश्वानरशब्दः परिणेय इत्युच्यते, तथापि शारीर आत्मा स्यात् । तस्य भोक्तृत्वेन वैश्वानरसन्निकर्षात् , प्रादेशमात्रमिति च विशेषणस्य तस्मिन्नुपाधिपरिच्छिन्ने सम्भवात् । तस्मान्नेश्वरो वैश्वानर इत्येवं प्राप्ते ततःஅக்3நிமாத்ரம் வா ஸ்யாத் , ஸாமாந்யேநாபி ப்ரயோக3த3ர்ஶநாத் —‘விஶ்வஸ்மா அக்3நிம் பு4வநாய தே3வா வைஶ்வாநரம் கேதுமஹ்நாமக்ருண்வந்’ (ரு. ஸம். 10 । 88 । 12)இத்யாதௌ3 । அக்3நிஶரீரா வா தே3வதா ஸ்யாத் , தஸ்யாமபி ப்ரயோக3த3ர்ஶநாத் —‘வைஶ்வாநரஸ்ய ஸுமதௌ ஸ்யாம ராஜா ஹி கம் பு4வநாநாமபி4ஶ்ரீ꞉’ (ரு. ஸம். 1 । 98 । 1)இத்யேவமாத்3யாயா꞉ ஶ்ருதேர்தே3வதாயாமைஶ்வர்யாத்3யுபேதாயாம் ஸம்ப4வாத் । அதா2த்மஶப்3த3ஸாமாநாதி4கரண்யாது3பக்ரமே ச ‘கோ ந ஆத்மா கிம் ப்3ரஹ்ம’ இதி கேவலாத்மஶப்3த3ப்ரயோகா3தா3த்மஶப்3த3வஶேந வைஶ்வாநரஶப்3த3꞉ பரிணேய இத்யுச்யதே, ததா2பி ஶாரீர ஆத்மா ஸ்யாத் । தஸ்ய போ4க்த்ருத்வேந வைஶ்வாநரஸந்நிகர்ஷாத் , ப்ராதே3ஶமாத்ரமிதி ச விஶேஷணஸ்ய தஸ்மிந்நுபாதி4பரிச்சி2ந்நே ஸம்ப4வாத் । தஸ்மாந்நேஶ்வரோ வைஶ்வாநர இத்யேவம் ப்ராப்தே தத꞉
तत्रेदमुच्यते — वैश्वानरः परमात्मा भवितुमर्हति । कुतः ? साधारणशब्दविशेषात् । साधारणशब्दयोर्विशेषः साधारणशब्दविशेषः । यद्यप्येतावुभावप्यात्मवैश्वानरशब्दौ साधारणशब्दौ — वैश्वानरशब्दस्तु त्रयस्य साधारणः, आत्मशब्दश्च द्वयस्य, तथापि विशेषो दृश्यते, येन परमेश्वरपरत्वं तयोरभ्युपगम्यते — ‘तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाः’ इत्यादिः ।தத்ரேத3முச்யதே — வைஶ்வாநர꞉ பரமாத்மா ப4விதுமர்ஹதி । குத꞉ ? ஸாதா4ரணஶப்3த3விஶேஷாத் । ஸாதா4ரணஶப்3த3யோர்விஶேஷ꞉ ஸாதா4ரணஶப்3த3விஶேஷ꞉ । யத்3யப்யேதாவுபா4வப்யாத்மவைஶ்வாநரஶப்3தௌ3 ஸாதா4ரணஶப்3தௌ3 — வைஶ்வாநரஶப்3த3ஸ்து த்ரயஸ்ய ஸாதா4ரண꞉, ஆத்மஶப்3த3ஶ்ச த்3வயஸ்ய, ததா2பி விஶேஷோ த்3ருஶ்யதே, யேந பரமேஶ்வரபரத்வம் தயோரப்4யுபக3ம்யதே — ‘தஸ்ய ஹ வா ஏதஸ்யாத்மநோ வைஶ்வாநரஸ்ய மூர்தை4வ ஸுதேஜா꞉’ இத்யாதி3꞉ ।
अत्र हि परमेश्वर एव द्युमूर्धत्वादिविशिष्टोऽवस्थान्तरगतः प्रत्यगात्मत्वेनोपन्यस्त आध्यानायेति गम्यते, कारणत्वात् । कारणस्य हि सर्वाभिः कार्यगताभिरवस्थाभिरवस्थावत्त्वात् द्युलोकाद्यवयवत्वमुपपद्यते । ‘स सर्वेषु लोकेषु सर्वेषु भूतेषु सर्वेष्वात्मस्वन्नमत्ति’ इति च सर्वलोकाद्याश्रयं फलं श्रूयमाणं परमकारणपरिग्रहे सम्भवति,‘एवं हास्य सर्वे पाप्मानः प्रदूयन्ते’ (छा. उ. ५ । २४ । ३)इति च तद्विदः सर्वपाप्मप्रदाहश्रवणम् , ‘को न आत्मा किं ब्रह्म’ इति चात्मब्रह्मशब्दाभ्यामुपक्रमः; — इत्येवमेतानि लिङ्गानि परमेश्वरमेव गमयन्ति । तस्मात्परमेश्वर एव वैश्वानरः ॥ २४ ॥அத்ர ஹி பரமேஶ்வர ஏவ த்3யுமூர்த4த்வாதி3விஶிஷ்டோ(அ)வஸ்தா2ந்தரக3த꞉ ப்ரத்யகா3த்மத்வேநோபந்யஸ்த ஆத்4யாநாயேதி க3ம்யதே, காரணத்வாத் । காரணஸ்ய ஹி ஸர்வாபி4꞉ கார்யக3தாபி4ரவஸ்தா2பி4ரவஸ்தா2வத்த்வாத் த்3யுலோகாத்3யவயவத்வமுபபத்3யதே । ‘ஸ ஸர்வேஷு லோகேஷு ஸர்வேஷு பூ4தேஷு ஸர்வேஷ்வாத்மஸ்வந்நமத்தி’ இதி ச ஸர்வலோகாத்3யாஶ்ரயம் ப2லம் ஶ்ரூயமாணம் பரமகாரணபரிக்3ரஹே ஸம்ப4வதி,‘ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந꞉ ப்ரதூ3யந்தே’ (சா2. உ. 5 । 24 । 3)இதி ச தத்3வித3꞉ ஸர்வபாப்மப்ரதா3ஹஶ்ரவணம் , ‘கோ ந ஆத்மா கிம் ப்3ரஹ்ம’ இதி சாத்மப்3ரஹ்மஶப்3தா3ப்4யாமுபக்ரம꞉; — இத்யேவமேதாநி லிங்கா3நி பரமேஶ்வரமேவ க3மயந்தி । தஸ்மாத்பரமேஶ்வர ஏவ வைஶ்வாநர꞉ ॥ 24 ॥
ப்ராசீனசாலர், ஸத்யயஜ்ஞர், இந்த்ரத்யும்னர், ஜனர், புடிலர் இந்த ஐவரும் மஹாசுரோத்ரியர்கள். இவர்கள் ஒன்று சேர்ந்து நம் ஆத்மா எது? பிரஹ்மம் எது? என்று விசாரம் செய்தார்கள். தீர்மானம் தெரியாததால் உத்தாலகரிடம் போய் வைசுவாநர ஆத்மாவைப்பற்றிக் கேட்டார்கள். அவருக்கும் முழுவதும் தெரியாததால் எல்லாரும் கேகய நாட்டரசனான, அச்வபதியிடம் சென்றார்கள். அரசன் இவர்களை வரவேற்று தனித்தனியாக ஸத்காரம் செய்து தனத்தைக்கொடுத்தான். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. 'நான் ஒரு பாபமும் செய்யவில்லையே ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை' என்று கேட்டு 'நான் சமீபத்தில் நடத்தப்போகும் யாகத்தில் உங்களுக்கு ஏராளமாகப் பொருள் தருகிறேன்' என்று சொன்னான். அவர்கள் இப்பொழுது எங்களுக்குப் பணம் தேவையில்லை. வைசுவானர ஆத்மாவைப்பற்றி உனக்குத் தெரியும், அதை எங்களுக்குச் சொல்லவேணும்' என்று கேட்டார்கள். அரசன் ப்ராசீனசாலரிடம் நீர், எந்த ஆத்மாவை வைச்வாநரராக உபாஸிக்கிறீர்? என்று கேட்டார். 'த்யுலோகத்தை' என்று அவர் பதில் சொன்னார். இவ்விதமே மற்றவர்களும் முறையே ஸூர்யன், வாயு, ஆகாசம், ஜலம், பிருதிவி இவைகளை உபாஸிப்பதாகச் சொன்னார்கள். அரசன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணத்தைக் கூறிவிட்டு இவைகள் ஒவ்வொன்றும் வைச்வாநரனின் சிரஸ் முதலிய அவயவங்களே தவிர இதுவே வைச்வாநராத்மா இல்லை. இப்படி உபாஸிப்பவன் க்ஷேஷமமடையமாட்டான் என்று தனித்தனியான உபாஸ னையை நிந்தித்துவிட்டு எல்லா அவயவங்களுடன் சேர்த்து வைச்வாநராத்மாவை உபாஸிக்கிறவனுக்கு எல்லா போகங்களும் ஏற்படுவதாகக் கூறினார்.

இங்கு கூறப்பட்டுள்ள வைச்வாநரன் வயிற்றி லுள்ள ஜாடராக்னியா, அல்லது ஐந்து பூதங்களில் ஒன்றான அக்னியா, அக்னிதேவதையா, ஜீவனா, ஈசுவரனா என்று ஸந்தேஹம். வைச்வாநரபதம் இருப்பதால் ஜாடராக்னி, பூதாக்னி, அக்னிதேவதை இம்மூன்றில் ஒன்றாக இருக்கலாம். வைச்வாநரன் ஈசுவரன் இல்லை என்று பூர்வபக்ஷம், த்யுலோகம் முதலியவைகளை அவயவமாகச் சொல்லி இருப்பதாலும், பிரஹ்ம சப்தம் இருப்பதாலும் வைச்வாநரன் ஸர்வகாரணமான ஈசுவரன் தான் வைசுவாநர ஆத்ம சப்தங்களுக்கு ஈசுவரனையும் பொருளாகக் கூறலாம் என்று ஸித்தாந்தம்.

'நம்முடைய ஆத்மா யார், பிரஹ்மம் எது?' ‘(எந்த) ஆத்மாவை வைசுவாநரராக நீர் இப்பொழுது அறிந்திருக்கிறீரோ அதையே எங்களுக்கு சொல்லும்' (சாந். 5-11-1, 6) என்று ஆரம்பித்து, 'த்யுலோகம், ஸூர்யன் வாயு, ஆகாசம், ஜலம், பூமி இவைகளுக்கு நன்கு பிரகாசிக்கும் தன்மை முதலிய குணங்களிருப் பதையும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக உபாஸிப்பதை நிந்திப்பது மூலமாய் இவைகளுக்கு வைசுவாநரரை உத்தேசித்து சிரஸ் முதலியதாக இருக்கும் தன்மையையும் உபதேசித்துவிட்டு சொல்லப்படுகிறது' 'இந்த ஓட்டைச்சாண் அளவுள்ள நேரில் நன்கு எல்லாவற்றையும் அறியும் ஆத்மாவான வைசுவாநரரை எவன் இவ்விதம் உபாஸிக்கிறானோ, அவன் எல்லா உலகங்களிலும் எல்லா சரீரங்களிலும், எல்லா ஜீவர்களிலும் இருந்து கொண்டு அன்னம் சாப்பிடுகிறான். (போகங்களை அனுபவிக் கிறான்).' அந்த இந்த வைசுவாநர ஆத்மாவிற்கு நன்கு பிரகாசிப்பது (த்யுலோகம்) தான் சிரஸ்; எல்லா ரூபமுடையவர் (ஸூர்யன்) கண்; நாலா பக்கங்களிலும் போகக்கூடிய ஸ்வபாவமுடையவர் (வாயு) பிராணன்; எங்கும் வியாபிப்பது (ஆகாசம்) உடலின் மத்யபாகம்; செல்வமுள்ளது (ஜலம்) தான் மூத்திரப்பை பூமியே பாதங்கள்; வேதியே மார்பு; பர்ஹிஸ் (தர்ப்பை) ரோமங்கள் கார்ஹபத்யம் ஹ்ருதயம்; அன்வா ஹார்யபசனம் (தக்ஷிணாக்னி) மனஸ்; ஆஹவநீயம் முகம் (சாந் 5-18-2) என்பது முதலியது.
அங்கே 'வைசுவாநரன்' என்ற சப்தத்தினால் வயிற்றிலுள்ள அக்னி, (ஜாடராக்னி) உபதேசிக் கப்படுகிறதா, அல்லது (ஐந்து பூதங்களில் சேர்ந்த) பூதாக்னியா அல்லது அதை அபிமானிக்கும் (அக்னி) தேவதையா, அல்லது சாரீரனா (ஜீவனா), அல்லது பரமேசுவரரா என்று ஸந்தேஹம். இங்கு ஸந்தே ஹத்திற்கு என்ன காரணம்? வயிற்றிலிருப்பது, பூதாக்னி தேவதை இம்மூவர்களுக்கும் ‘வைசுவாநரன்' என்று பொதுவாக சப்தத்தின் பிரயோகமிருப்பதினாலும், சாரீரனுக்கும், பரமேசுவரருக்கும் 'ஆத்மா' என்று (பொதுவாயுள்ள சப்தத்தில் பிரயோகம் இருப்பதினாலும், அவைகளுள் எதை எடுத்துக்கொள்வது நியாயம் எதை விடுவது நியாயம் என்று ஸந்தேஹம் ஏற்படுகிறது.

பூர்வபக்ஷம்: எது நியாயம்? வயிற்றிலுள்ள அக்னி என்று, ஏன்? அந்த அர்தத்தில் அல்லவா விசேஷமாக ‘எந்த இது சரீரத்திற்கு உள்ளே, எது சாப்பிடப்படுகிறதோ இந்த அன்னம் எதனால் பாகம் செய்யப்படுகிறதோ (ஜரிப்பிக் கிறதோ இந்த அக்னி வைசுவாநரன்' (பிருஹத் 5-9) என்பது முதலான சில இடங்களில் காண்கிறது.
அல்லது, வெறும் அக்னியாக இருக்கலாம். 'எல்லா உலகத்தின் பொருட்டு தேவர்கள் வைசுவாநரனை (அக்னியை) பகல்களுக்குக் கொடியாக (ஸூர்யனாக) செய்தார்கள் (ரிக்ஸம்ஹிதை 10-88-12) என்பது முதலியதில் ஸாமான்யமாகவும் பிரயோகம் காணுவதால்.

அல்லது, அக்னியை சரீரமாயுடைய தேவதையாக இருக்கலாம், அதிலும் பிரயோகம் 'வைசுவாநரருடைய நல்ல எண்ணத்தில் நாம் இருப்போமாக, அவர் உலகங் களுக்கெல்லாம் அரசன், ஸுகத்தைக்கொடுப்பவர், ஐசுவரியமுள்ளவர் அல்லவா' (ரிக்ஸம்ஹிதை 1 98-1) என்பது முதலான சுருதியினால் ஐசுவரியம் முதலியதுடன் கூடிய தேவதை விஷயத்தில் பொருந்துமானதினால்.

அல்லது, ஆத்மா என்ற சப்தத்திற்கு ஸாமானாதி கரண்யமிருப்பதாலும் (வைசுவாநர ஆத்மா என்று), ஆரம்பத்திலும் 'நமக்கு ஆத்மா யார், பிரஹ்மம் எது' என்று வெறும் (வைச்வாநரபதமில்லாமல்) ஆத்மா என்ற சப்தத்தின் பிரயோகம் இருப்பதினாலும் ஆத்மா என்ற சப்தத்தின் பலத்தினால் வைசுவாநரன் என்ற சப்தம் மாற்றிப்பொருள் கொள்ளவேண்டும் என்று சொல்லப் படுமேயானால் அப்படியானாலும் சரீரத்திலுள்ள ஆத்மாகவா இருக்கலாம். அதற்கு போக்தா என்ற தன்மையினால் வைசுவாநரருக்கு ஸமீபத்திலிருப்பதால் ஓட்டைச்சாண் அளவுள்ளது என்ற விசேஷணமும் உபாதியினால் அளவுக்குள் பட்டிருக்கும் அதில் பொருந்துமாதலால்.

ஆகையால் வைசுவாநரன் ஈசுவரன் இல்லை, என்று
ஸித்தாந்தம்: இவ்விதம் ஏற்படும் போது அதற்காக இது சொல்லப்படுகிறது. வைசுவாநரன் பரமாத்மாவாக இருப்பதுதான் நியாயம். ஏன்? 'ஸாதாரண சப்தத்தில் விசேஷமிருப்பதால்' ஸாதாரண சப்தங்களுக்குள் விசேஷம் ஸாதாரண சப்த விசேஷம். ஆத்மா வைசுவாநரன் என்ற இந்த இரண்டு சப்தங்களும் ஸாதாரண சப்தங்களாக இருந்தபோதிலும், வைசுவாநர சப்தமோ மூன்றுக்கு (ஜாடராக்னி, பூதாக்னி, அக்னி தேவதை) ஸாதாரணம். ஆத்ம சப்தம் இரண்டிற்கு (ஜீவன், பரமாத்மா) என்று அப்படியும் விசேஷம் காணப்படுகிறது. 'அந்த இந்த வைசுவாநர ஆத்மாவினுடைய சிரஸ்தான் த்யுலோகம்' என்பது முதலியது;
அதனால் இரண்டிற்கும் பரமேசுவரனில் தாத்பர்யம் அறியப்படுகிறது.

இங்கே த்யுலோகத்தை சிரஸாகவுடையதன்மை முதலியதுடன் சேர்ந்து வேறு நிலையை அடைந்த பரமேசுவரரே தான் தியானத்திற்காக உள் இருக்கும் ஆத்மாவாக சொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. காரணமாயிருப்பதால், காரணபதார்த்தத்திற்கல்லவா கார்யத்திலுள்ள எல்லா நிலைகளினாலும் அந்நிலை யுள்ள தன்மை ஏற்படுவதால் த்யுலோகம் முதலியதை அவயவமாகவுடைய தன்மை பொருந்தும். மேலும், 'அவன் எல்லா உலகங்களிலும் எல்லா சரீரங்களிலும் எல்லா ஆத்மாக்களிலும் இருந்துகொண்டு போகத்தை அனுபவிக்கிறான்' என்று எல்லா உலகம் முதலியதை ஒட்டிய பலன் சொல்லப்படுவது பரம் காரணத்தை எடுத்துக்கொண்டால்தான் ஸம்பவிக்கும். 'இவ்விதம் இவனுடைய எல்லா பாபங்களும் போய்விடுகின்றன' (சாந். 5 24-3) என்று அதையறிந்தவனுக்கு எல்லா பாபங்களும் எரிந்து விடுவதாகச் சொல்வது ‘நமக்கு ஆத்மா யார், பிரஹ்மம் எது' என்று ஆத்மா பிரஹ்மம் என்ற இரண்டு சப்தங்களைக் கொண்டு ஆரம்பம் என்ற இவ்விதமான இந்த லிங்கங்களும் பரமேசுவரரையே அறிவிக்கின்றன. ஆகையால் பரமேசுவரர் தான் வைசுவாநரர்.